மேலும் செய்திகள்
சிவப்பு சோளம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்
22-Jun-2025
பேரையூர்: பேரையூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள வெள்ளைச் சோளம், சிவப்பு சோளம் நன்றாக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சோளப் பயிர் இரண்டு ரகங்களாக சாகுபடி செய்யப்படுகின்றன. முதல் ரகம் சிவப்பு சோளம். இரண்டாவது ரகம் வெள்ளைச் சோளம் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சோளத்தை அறுவடை செய்து வருகின்றனர். சோளப் பயிர் அதிக மகசூல் கிடைக்கும் வகையில் விளைச்சல் கண்டுள்ளது. இச்சோளம் அதிகமாக சத்துமாவு தயாரிக்கவும், பெங்களூரு பகுதிகளில் உயர்தர உணவகங்களில் ரொட்டி போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.மேலும் தரமான தானிய உணவு வகைகளில் சிறந்த உணவாக கம்புக்கு அடுத்தபடியாக சோளம் சார்ந்த உணவுப் பொருட்களே கருதப்படுகிறது. கால்நடைகளின் தீவனப் பொருட்களாகவும் பயன்படுகிறது. கோழிப் பண்ணைகளுக்கு நேரடி உணவாகவும் சோளம் அதிகளவில் அனுப்பப்படுகிறது.
22-Jun-2025