உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கப்பலுார் வேகமாக வளர்ச்சி அடைகிறது; ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனர் தகவல்

மதுரையில் கப்பலுார் வேகமாக வளர்ச்சி அடைகிறது; ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனர் தகவல்

மதுரை: தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு இடங்களில் ஒன்றாக மதுரை கப்பலுார் மாறி வருகிறது என 'ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ்' நிறுவனர் பால ராமஜெயம் தெரிவித்தார்.தென்னிந்தியாவின் முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், மதுரை கப்பலுார் - விமான நிலைய ரிங் ரோட்டில் 30 ஏக்கர் பரப்பளவில் 'ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை விற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தயார் நிலையில் உள்ளன.அண்மையில் நடந்த இதன் வெற்றி விழாவில் பட்டிமன்றம், நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது.அப்போது நிறுவனர் பால ராமஜெயம் கூறியதாவது:இந்த மைல்கல் சாதனை எங்களுக்கானது மட்டுமல்ல, ஜிஸ்கொயர் பார்ச்சூன் சிட்டியை தேர்வு செய்த ஒவ்வொரு குடும்பத்திற்குமானது. ஒரு சிறந்த நகரம் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அதைத்தான் நாங்கள் மதுரை மக்களுக்கு வழங்கியுள்ளோம். தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு இடங்களில் ஒன்றாக கப்பலுார் மாறி வருகிறது. இங்கு உருவாகி வரும் உள்கட்டமைப்பு வசதிகளால் கப்பலுார் அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. மதுரையில் கிடைத்த வரவேற்பு எங்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை காட்டுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ