உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்கேட்டிங் செல்லும் கேரள இளைஞர்கள் போதை விழிப்புணர்வுக்காக

ஸ்கேட்டிங் செல்லும் கேரள இளைஞர்கள் போதை விழிப்புணர்வுக்காக

திருமங்கலம், : போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்தும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'ஸ்கேட்டிங்' பயணம் மேற்கொண்ட கேரள இளைஞர்களுக்கு, திருமங்கலம் தென்றல் அரிமா சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜெயின்ஜான், ஜெரின்வர்கசி இருவரும் போதைப் பொருள் தடுப்பு, அதன் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பயணத்தை டிச. 16ல் கன்னியாகுமரியில் தொடங்கினர். ஒருவர் ஸ்கேட்டிங் செல்லும்போது, மற்றவர் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர்.இவ்வாறு தினமும் 50 முதல் 60 கி.மீ., பயணிக்கின்றனர். இரவு நேரங்களில் பெட்ரோல் பங்குகளில், தற்காலிக கூடாரம் அமைத்து தங்குகின்றனர்.தன்னார்வலர்கள் உதவியுடன் பயணத்தைத் தொடர்ந்து செய்கின்றனர். நான்கு மாதங்களில் காஷ்மீர் சென்று சேர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். நேற்று கள்ளிக்குடி வந்த அவர்களை, திருமங்கலம் தென்றல் அரிமா சங்கம் சார்பில் பட்டய தலைவர் செந்தில்நாதன், செயல் தலைவர் ஆர்யா, நிர்வாகிகள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ