உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

மதுரை: புதுடில்லியில் வாக்கோ இந்தியா சார்பில் நடந்த 3வது சர்வதேசகிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் 3 மாணவ, மாணவியர் 2 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.இப்போட்டி பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், புல் கான்டாக்ட், கிரியேட்டிவ் பார்ம் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்தது. இதில் மாணவி சாரா பாயின்ட் பைட்டிங் பிரிவில் தங்கம், கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.மாணவர் தியான் பாயின்ட் பைட்டிங் பிரிவில் வெள்ளி, கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் தங்கம் வென்றார். மாணவர் நிகில் பாயின்ட் பைட்டிங், கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களை சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், துணைத் தலைவர் கார்த்திக் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை