உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிடா முட்டுத் திருவிழா

கிடா முட்டுத் திருவிழா

திருமங்கலம்: திருமங்கலம் செக்கானுாரணி அருகே தேன்கல்பட்டியில் ஆறு கரை கிராம பொதுமக்கள் சார்பில் கிடா முட்டுத் திருவிழா நடந்தது.இதில் மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், செக்கானுாரணி, தேனி, கம்பம், வத்தலகுண்டு, சோழவந்தான், திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 180 கிடாக்கள் மோதின. நிகழ்ச்சிக்கு வந்த கிடாக்கள் 40 முதல் 70 கிலோ எடை வரை இருந்ததுடன், ரோமங்கள் மிகவும் அலங்கரிக்கப்பட்டு, கொம்புகள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன.ஒவ்வொரு கிடாவும் மற்றொரு கிடாவுடன் 75 முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் போட்டிகள் நடந்தன. காயம் அடைந்த ஆட்டுக்கிடாக்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் கால்நடை சிகிச்சை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை