உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலு பொம்மைகள் கண்காட்சி

கொலு பொம்மைகள் கண்காட்சி

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் உயராய்வு மையம், விளாச்சேரி கொலு பொம்மை உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை நேற்று துவங்கியது. செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் ராமசுப்பையா குத்துவிளக்கு ஏற்றினார். தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, உதவி தலைவர் ஜெயராம் முன்னிலை வகித்தனர்.விளாச்சேரி பொம்மை உற்பத்தியாளர் ராமலிங்கம், முன்னாள் மாணவி முத்துமீனாட்சி பேசினர். கண்காட்சி கன்வீனர் பேராசிரியர் ராதிகா, அமைப்புச் செயலாளர் பேராசிரியர் கோதை நாச்சியார், பேராசிரியர்கள் அற்புதராஜ், கீதா, தேவிகா, பால சத்தியா, கஜப்பிரியா, சாய் மோகனா, பாண்டீஸ்வரி, லில்லி கண்காட்சி ஏற்பாடுகள் செய்தனர். 21 ஸ்டால்களில் கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி இன்று (செப்.27) காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை