மேலும் செய்திகள்
சவுராஷ்டிரா கல்லுாரி சாம்பியன்
09-Sep-2025
திருப்பரங்குன்றம் : மதுரையில் நடந்த முதல்வர் கோப்பை மகளிர் கபடி போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. நாக் அவுட் முறையில் நடந்த இப் போட்டிகளில் 5 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி அணி 30 -- 6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஆலங் கொட்டாரம் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. வென்ற அணியினரை கல்லுாரி தலைவர் விஜய ராகவன், கவுரவத் தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், உப தலைவர் ஜெயராமன், உதவி செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, உடற்கல்வி இயக்குனர்கள் ராகவன், கோவிந்தம்மாள் பாராட்டினர்.
09-Sep-2025