மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு
02-Oct-2025
மதுரை: மதுரையில் அகில இந்திய குலாலர் கலை, அறிவியல் மற்றும் ஆன்மிக சேவை அறக்கட்டளை சார்பில் மாநில மாநாடு நடந்தது. தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் வைரமணி வரவேற்றார். கல்வியாளர்கள், சாதனையாளர்கள், அரசு பொதுத்தேர்தவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர் இளங்கோவன், தீனதயாளன் பங்கேற்றனர். கல்வி அறக்கட்டளையின் வளர்ச்சி, செயல்பாடுகள் பற்றி நிறுவனர் ஜெயபிரகாஷ் நாராயணன் பேசினார். சேலம், நாமக்கல் செயலாளர் மனோகரன் கொடியேற்றினார். ஓசூர் தலைவர் ஸ்ரீனிவாசன், மயில்சாமி, மாணிக்கவாசகம், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியவீரன், ராமதாஸ், வழக்கறிஞர்கள் நாகேந்திரன், குரு முருகானந்தம் கலந்துகொண்டனர்.
02-Oct-2025