மேலும் செய்திகள்
காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
09-Nov-2024
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் ஆர்.சி., தெரு காளியம்மன், விநாயகர், மாரியம்மன், கருப்புசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ.,13ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆர்.சி.,தெரு கிராமமக்கள் செய்திருந்தனர். வாடிப்பட்டி
தெ.கெங்கமுத்துாரில் சித்தி விநாயகர், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ.13ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 3ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிராமிய நாடகம் நடந்தது.
09-Nov-2024