குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கால அட்டவணை எதிர்பார்ப்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு கவுன்டரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களின் கால அட்டவணையை பார்வைக்கு வைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த ஸ்டேஷனில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்கின்றனர். திருப்பரங்குன்றத்தை கடந்து செல்லும் ரயில்களின் கால அட்டவணை மட்டும் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களின் கால அட்டவணை இல்லை. இதனால் முன்பதிவுக்கு ரயில்வே பணியாளரிடமே ரயில் எண்களை கேட்டு, படிவத்தில் நிரப்பி பயணிகள் கொடுக்கின்றனர். இதனால் பணியாளருக்கு சிரமம் ஏற்படுவதுடன் முன்பதிவிலும் தாமதம் ஏற்படுகிறது.மதுரையிலிருந்து புறப்படும் அனைத்து முன்பதிவு ரயில்களின் எண்கள், நேரம் குறித்த அட்டவணையை பார்வைக்கு வைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.