கழிப்பறையில் பெண்ணை வீடியோ எடுத்தவர் கைது
மதுரை: மதுரை தத்தனேரி செல்வப்பாண்டி 22. இவர் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் காசாளராக உள்ளார். நேற்று மதியம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியின் உறவினர்கள் சிலர் ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர். அதில் உள்ள பெண் ஒருவர் அங்கிருந்த கழிப்பறைக்கு சென்றபோது ஜன்னல் வழியாக அவரை செல்வப்பாண்டி வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த அப்பெண் கூச்சலிட, அவரது உறவினர்கள் செல்வப்பாண்டியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மதிச்சியம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.