மேலும் செய்திகள்
ஆகாச முத்து காளியம்மன் கோயில் லட்சார்ச்சனை விழா
11-Aug-2025
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை துவங்கியது. ஹைடெக் அராய் நிறுவனம் சார்பில் நேற்று காலை நடந்த லட்சார்ச்சனையில் மூலவர்முன்பு உற்ஸவர் மூஞ்சுறு வாகனத்தில் எழுந்தருளினார். பித்தளை குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜை நடந்தது. மாலை 6:15 முதல் இரவு 8:00 மணிவரை லட்சார்ச்சனை நடந்தது. ஹைடெக் ஆராய் நிறுவனம் முதல் நிலை மேலாளர் சண்முகசுந்தரம் பங்கேற்றார். உபயதாரர்கள் மூலம் இந்த லட்சார்ச்சனை ஆக. 26 வரை நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆக. 27 காலை மஹாகணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படி ஆகிறது. மாலையில் மூஷிக வாகனத்தில் உற்ஸவர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
11-Aug-2025