உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளிக்கு பாதுகாப்பு கோரி வழக்கு

பள்ளிக்கு பாதுகாப்பு கோரி வழக்கு

மதுரை: மதுரை சாந்தமூர்த்தி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:உலகனேரியில் ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. பள்ளி முடிந்து பஸ் ஸ்டாப்பிற்கு வரும் மாணவிகளை சிலர் கேலி, கிண்டல் செய்கின்றனர். வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.மாணவிகள் அச்சப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி காலை பள்ளி துவங்கும் நேரம், மாலை பள்ளி முடியும் நேரத்தில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.அருகே போலீஸ் 'அவுட்போஸ்ட்' அமைக்க வேண்டும் என கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., ஒத்தக்கடை இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு மனு மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஜூன் 5ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ