வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நுழைவுவாயில் முன் எம்.பி.எச்.ஏ.ஏ., வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் பெத்துராஜேஷ் முன்னிலை வகித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மதுரை நீதிமன்ற நுழைவுவாயில் முன் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.