உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தலைமைப்பண்பு பயிற்சி முகாம்

தலைமைப்பண்பு பயிற்சி முகாம்

மதுரை: மேலுார் கல்வி மாவட்டத்தில் அனைத்து பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஆலோசகர்களுக்கான ஒருநாள் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மேலுார் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 110 பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலுார் கல்வி அலுவலர் இந்திரா, பள்ளித் தலைமை ஆசிரியர் சைமன்ராஜ் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க கொடியை ஏற்றினர். ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் வரவேற்றார். மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, தென்மண்டல இளம் செஞ்சிலுவை சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் பேசினர். பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார். செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார், மாயாண்டி, தவமணி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை