உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லீக் ஹேண்ட்பால் போட்டி

லீக் ஹேண்ட்பால் போட்டி

மதுரை : பன்யான் அறக்கட்டளை, மதர் குளோப் ரெவலுஷேனரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் திருநகர் மைதானத்தில் ஆடவர், மகளிர் ஹேண்ட்பால் போட்டிகள் நடக்கின்றன.மகளிர் பிரிவு லீக் முதல் சுற்று போட்டி முதல் போட்டியில் பாத்திமா கல்லுாாரி 14 - 5 கோல் கணக்கில் நிர்மலா பள்ளியை வீழ்த்தியது. நிர்மலா பள்ளி 15 - 3 கோல் கணக்கில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது. 3வது போட்டியில் பாத்திமா கல்லுாரி 9 - 0 கோல் கணக்கில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது.14 வயது ஆண்கள் லீக் முதல் சுற்று போட்டியில் டால்பின் பள்ளி 19 - 2 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் பள்ளியை வீழ்த்தியது. 2வது போட்டியில் ஓம் சாதனா பள்ளி 18 - 17 கோல் வித்தியாசத்தில் ரயில்வே பள்ளியை வீழ்த்தியது. 3வது போட்டியில் ரயில்வே பள்ளி 12 - 9 கோல் வித்தியாசத்தில் சி.எஸ்.ஆர்., பள்ளியை வீழ்த்தியது. 4வது போட்டியில் டால்பின் பள்ளி 15 - 7 கோல் வித்தியாசத்தில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது. 5வது போட்டியில் மதர் குளோப் அணி 10 - 9 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் பள்ளியை வீழ்த்தியது.19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவு முதல் சுற்று முதல் போட்டியில் மதர் குளோப் அணி 10 - 8 கோல் வித்தியாசத்தில் ரயில்வே பள்ளியை வீழ்த்தியது. 2வது போட்டியில் சி.எஸ்.ஆர்., அணி 7 - 6 கோல் வித்தியாசத்தில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது. 3வது போட்டியில் மதர் குளோப் அணி 17 - 6 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் அணியை வீழ்த்தியது. அகாடமி தலைவர் அன்பரசன், பயிற்சியாளர் குமார் ஏற்பாடுகளை செய்தனர். போட்டிகள் மே 31 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை