சொற்பொழிவு
மதுரை, : மதுரை காந்தி மியூசியம் சார்பில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பு சொற்பொழிவு நடந்தது. அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சதீஷ் வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) பால்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் காந்தி மியூசியத்தின் சிறப்புகளை விளக்கினார். காந்தியின் சமூக, அரசியல் சிந்தனை எனும் தலைப்பில் அல்ட்ரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி நுாலகர் திருநாவுக்கரசு பேசினார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் நன்றி கூறினார்.