சட்ட முகாம்
அலங்காநல்லுார் : கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராம்கிஷோர் தலைமை வகித்து சட்டப்பணிகள் குறித்து விளக்கினார். தலைமை ஆசிரியர் சாம்பிரசாத் ராஜா முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். வழக்கறிஞர்கள் செல்வகுமார், விஜயகுமார், சீனிவாசன், சுமித்ரா, தயாநிதி, சந்திரமோகன், அரவிந்த் ராம் பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினர். அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் சங்கர், சுந்தரபாண்டி, ஞானதாஸ் ரவி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.