உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் 'ஒன்றிணைவோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. போலீஸ் எஸ்.பி., அரவிந்த் துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி.,கருணா கரன், ஆர்.டி.ஓ.,கருணாகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி.ஆனந்த்ராஜ் முன்னிலை வகித்தனர். மனித உரிமைகள் பிரிவு எஸ்.ஐ. கிருஷ்ணபாண்டி வரவேற்றார். போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண்கள், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தண்டனைகள் மற்றும் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு குறித்து விளக்கப்பட்டது. பாலமேடு அரசு மாதிரி பள்ளி மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சிறப்பு அரசு வழக்கறிஞர் அழகன், இளைஞர் நீதி குழும உறுப்பினர் பாண்டியராஜா பங்கேற்றனர். சமூக நீதி பிரிவு டி.எஸ்.பி. குமரேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ