காலமுறை ஊதியம் கேட்டு நுாலகர்கள் உண்ணாவிரதம்
மதுரை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பொது நுாலக இயக்ககம் உள்ளது. மாநில அளவில் 1915 ஊர்ப்புற நுாலகங்களில் 1006 பேர் பணியாற்றுகின்றனர். மீதியுள்ள 50 சதவீத இடங்கள் காலயாக உள்ளன. ஊர்ப்புற நுாலகர்களுக்கு 13 ஆண்டுகளாக சிறப்பு கால முறை ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இவர்களுக்கென பதவி உயர்வு, மருத்துவ விடுப்பு, பி.எப்., போன்ற வசதிகள் கிடையாது. தேர்தல் வாக்குறுதிபடி தங்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பின் மாநில நிர்வாகிகள் நரசிம்மபல்லவன், மும்தாஜ், திவான்பீவி, முத்துராமன் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் விஜயராணி, பட்டம்மாள், பிரதீபா, ஜெயமுருகன், மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.