உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீண்டும் திறக்க காத்திருக்கும் நுாலக இணைப்பு கட்டடம்

மீண்டும் திறக்க காத்திருக்கும் நுாலக இணைப்பு கட்டடம்

வாடிப்பட்டி: குட்லாடம்பட்டியில் திறப்பு விழா கண்ட நுாலக இணைப்பு கட்டடம், மீண்டும் காணொலி காட்சி திறப்பிற்காக காத்திருக்கிறது.இக்கிராமத்தில் பழுதடைந்த கட்டடத்தில் கிளை நுாலகம் செயல்படுகிறது. மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகுவது, புத்தகங்களை பாதுகாக்க முடியாத நிலை, வெளிப்புற சிலாப்புகள் உடைந்து விழுவது என கட்டடம் அச்சுறுத்துகிறது. இதன் அருகே புதிய நுாலக இணைப்பு கட்டடம் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்டது. ஜன.,2ல் எம்.எல்.ஏ., வெங்கடேசன் திறந்து வைத்தார்.ஊராட்சி நிர்வாகம் மாவட்ட நுாலக துறையிடம் கட்டடத்தை ஒப்படைத்த நிலையில் இன்றுவரை பூட்டியே உள்ளது. துறை அலுவலர்களிடம் கேட்டபோது முதல்வர் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தனர். திறந்த கட்டடத்தை மீண்டும் திறக்க 3 மாதங்களுக்கு மேல் பூட்டி வைப்பதா, ஊராட்சி, நுாலகம் என துறைக்கு துறை திறப்பு விழா நடத்துவதா என வாசகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பழைய நுாலக கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை