மண் அள்ளிய லாரிகள் பறிமுதல்
திருமங்கலம்: திருமங்கலம் அருகே விருசங்குளம் ஊராட்சி புளியங்குளம் பெரிய கண்மாயில் சிலர் மண் திருட்டில் ஈடுபட்டதை அறிந்து எஸ்.பி., தேவநாதன் நேரில் சென்றார். மண் அள்ளியவர்களிடம் விசாரித்த போது அலப்பலச்சேரி சரவணன் என்பவர் அனுமதி பெற்று விவசாயத்திற்காக வண்டல் மண் அள்ளுவதாக தெரிவித்தனர். ஆனால் பாறை மண்ணையும் அள்ளியது தெரியவந்தது. ஆர்.டி.ஓ., சிவஜோதிக்கு எஸ்.பி., தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து லாரிகள், மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. தாசில்தார் முத்துலட்சுமி தலைமையில் விசாரணை நடக்கிறது.