உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  செக்போஸ்டில் மோதிய லாரி

 செக்போஸ்டில் மோதிய லாரி

திருமங்கலம்: மதுரை மாவட்ட எல்லையான கள்ளிக்குடி ஆவல்சூரன்பட்டியில் போலீஸ் செக் போஸ்ட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு விருதுநகர் டிரைவர் பாண்டி 32, லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரை சென்றார். செக்போஸ்ட் அருகே நிலை தடுமாறிய லாரி, ரோடு தடுப்பில் மோதியதில், முன் பகுதி சேதம் அடைந்தது. டிரைவர் பாண்டி இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார். விருதுநகர் - மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள், போலீசார் இடிபாடுகளில் சிக்கிய டிரைவரை மீட்டனர். லாரி அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டபின், போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !