உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மடீட்சியாவின் ‛பிரின்ட் அன்ட் பேக் 2024 தொழில் கண்காட்சி; டிச.20 -22 வரை நடக்கிறது

மடீட்சியாவின் ‛பிரின்ட் அன்ட் பேக் 2024 தொழில் கண்காட்சி; டிச.20 -22 வரை நடக்கிறது

மதுரை: மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சார்பில் டிச. 20 முதல் 22 வரை மதுரை ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில் 'பிரின்ட் அன்ட் பேக் 2024' தொழில் கண்காட்சி நடக்கிறது.மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் வணிகத்துறை, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆதரவுடன் கண்காட்சி நடத்தப்படுவதாக கண்காட்சி தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: இந்திய மாஸ்டர் பிரின்டர்ஸ் கூட்டமைப்பு, தமிழ்நாடு, சிவகாசி மாஸ்டர் பிரின்டர்ஸ் சங்கங்கள், மதுரை பிரின்டர்ஸ் சங்கம், மதுரை மாவட்ட ஆப்செட் பிரின்டர்ஸ் சங்கம் இணைந்து நடத்துகின்றன. அச்சுத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களை நுகர்வோர் அறியவும், தொழில்முனைவோர் தொழில்களை நவீனப்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி நடக்கிறது.சலுகை விலையில் இயந்திரங்களை வாங்கலாம். தொழில் துறை சார்ந்த கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அரங்கு அமைக்கும் நிறுவனங்களுக்கு ஸ்டால் கட்டணத்தில் 80 சதவீத மானியம் பெற்றுத் தரப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியும் இயந்திரங்களுக்கு உடனடியாக கடன் தர முன் வந்துள்ளன என்றார்.கண்காட்சி தினமும் காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். தொடர்புக்கு: 99622 20666.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ