மதுரை- சினிமா- 09.10
புகழ்ச்சி பற்றி பேசிய கல்யாணி பிரியதர்ஷன் 'லோகா சாப்டர் 1' படத்தில் சிறப்பாக நடித்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி அவர் கூறுகையில், ''லோகா வெற்றியால் இந்திய அளவில் கவனம் பெற்றுவிட்டது மகிழ்ச்சி. என்றாலும் வெற்றி, புகழ்ச்சியை நான் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து சினிமாவுக்காக கடினமாக உழைப்பை கொடுக்க தயாராக இருக்கிறேன். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை'' என்றார். கவின், நயன்தாரா நடிக்கும் 'ஹாய்' 'கிஸ்' படத்தை அடுத்து ஆண்ட்ரியா உடன் 'மாஸ்க்' படத்தில் நடித்துள்ளார் நடிகர் கவின். விரைவில் ரிலீசாகிறது. இதனையடுத்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு 'ஹாய்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.