மதுரை- சினிமா- 11.10
டிசம்பர் கிர்த்தி ஷெட்டி மாதம் நடிகை கிர்த்தி ஷெட்டி தமிழில் 'வா வாத்தியார், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே), ஜீனி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 'வா வாத்தியார்' படம் டிச., 5லும், எல்.ஐ.கே டிச., 18லும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இவற்றுடன் 'ஜீனி' படத்தையும் டிசம்பர் மாதமே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இது நிகழ்ந்தால் ஒரே மாதத்தில் கிர்த்தியின் மூன்று படங்கள் திரைக்கு வந்துவிடும். ஆக டிசம்பர் கிர்த்தி மாதம். அடி உதை வாங்கினேன்ஹீரோவான பூவையார் பாடகராக, குழந்தை நட்சத்திரமாக இருந்த பூவையார் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ராம் அப்துல்லா ஆண்டனி'. ஜெயவேல் இயக்கி உள்ளார். பூவையார் பேசுகையில் ''இந்த படத்தில் எல்லாமே லைவாக பண்ண வேண்டும் என்றார்கள். அதனால் அடி உதை எல்லாமே லைவாக வாங்கினேன். பாட்டு தான் எனக்கு எல்லாமே. நடிப்பு, பாட்டு இரண்டையும் தொடர்வேன்'' என்கிறார். என் மனதுக்கு நெருக்கமான படம்: ஜி.வி.பிரகாஷ் செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் படம் மெண்டல் மனதில். ஜி.வி பிரகாஷ் கூறுகையில், “இந்த படம் என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும். நான்காம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது'' என்றார். ஜனவரியில் படம் துவக்கம் வெங்கட் பிரபு பராசக்தி படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இது பற்றி வெங்கட் பிரபு கூறுகையில், ''படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்தாண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது. வித்தியாசமான சயின்ஸ் பிக் ஷன் கதையில் உருவாகிறது. இதில் மாறுபட்ட சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்க்கலாம்'' என்கிறார். பெரிய விஷயமாக்க விரும்பல: தீபிகா படுகோனே 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு போன்ற கண்டிஷன்களால் பிரபாஸின் 'ஸ்பிரிட், கல்கி 2' படங்களில் இருந்து நீக்கப்பட்டார் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே. இதுபற்றி அவர் கூறுகையில், ''இதை பெரிய விஷயமாக்க விரும்பவில்லை. பல ஆண் நடிகர்கள் 8 மணி நேரம் வேலை, வார இறுதியில் விடுமுறை என இருக்கின்றனர். என் போராட்டங்களை அமைதியாக போராடியுள்ளேன். சில சமயங்களில் அவை பொது வெளியில் வருகின்றன'' என்றார். திருமணமா... திரிஷா கிண்டல் பதில் முன்னணி நடிகை திரிஷா, 42, இன்னும் திருமணம் செய்யவில்லை. இடையில் வருண் மணியன் என்பவருடன் நடக்க இருந்த திருமணம் நின்றது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இவர் திருமணம் செய்ய போவதாக தகவல் பரவியது. இதற்கு திரிஷா வெளியிட்ட பதிவில் ''என் வாழ்க்கையை பற்றி மக்கள் முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்ச்சி. அப்படியே ஹனிமூன் செல்வது பற்றியும் சொன்னால் நல்லது'' என கிண்டலாக பதிவிட்டுள்ளார். 'விருஷபா' ரிலீஸ் தேதி அறி விப்பு மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் விருஷபா. வரலாற்று பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தை நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். நடிகை சிவரஞ்சனி மகன் ரோஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தெலுங்கு, மலையாளத்தில் தயாராகி உள்ள இப்படம் நவ.6ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.