சினிமா
'ராமாயணா' படத்தில் ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன்ஹிந்தியில் நிதிஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணா' படம் உருவாகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இதன் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், ஹாலிவுட்டில் 'லயன் கிங், டூனே' படங்களுக்கு ஆஸ்கர் வென்ற ஹான்ஸ் ஜிம்மர் என்பவரும் இசையமைக்கும் பணியில் இணைந்துள்ளார். இவர் 12 முறை ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலுக்கு தேர்வானவர்.சூரிக்காகவே எழுதப்பட்ட 'மண்டாடி' மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படம் 'மண்டாடி'. நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் மதிமாறன் கூறுகையில், ''காற்று, கடல் நீரோட்டம், மீன்கள் வரத்து ஆகியவற்றை கணித்து மீன்பிடிக்கும் படகை வழிநடத்தும் தலைமை நிலையில் இருப்பவரை மண்டாடி என அழைப்பர். இது சூரிக்காகவே எழுதப்பட்ட கதை. இப்படம் அவரது நடிப்பு வாழ்க்கையில் முக்கிய படியாக அமையும்'' என்றார்.ஹீரோயினுக்கும் கேங்ஸ்டர் கதை: பூஜா ஹெக்டே விருப்பம்கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' படம் மே 1ல் ரிலீசாகிறது. பூஜா ஹெக்டே கூறுகையில் ''கேங்ஸ்டர் கதையாக இதனை இயக்குனர் எழுதியுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள். அதில் நடிக்க வாய்ப்பு தாருங்கள். இப்படத்தில் என் கேரக்டரை வடிவமைத்ததற்கு மற்றும் அதில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக இயக்குனருக்கு நன்றி'' எனத் தெரிவித்தார்.மீண்டும் ஜோடி சேரும் நிதின் - கீர்த்தி சுரேஷ்இயக்குனர் வேணு இயக்கத்தில் தெலுங்கில் 'எல்லம்மா' எனும் படம் உருவாகிறது. இதில் நானி கதாநாயகனாக நடிக்க இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக நிதின் நாயகனாக நடிக்க உள்ளார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நிதின் - கீர்த்தி சுரேஷ் இதற்கு முன் 'ரங் டே' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.வெட்கமா இருக்கு : சமந்தாவின்வெறுப்புக்கு காரணம் என்னநடிகை சமந்தா முதன்முறையாக 'சுபம்' படத்தை தயாரித்துள்ளார். மே 9ல் ரிலீசாகிறது. சமந்தா கூறுகையில் ''எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் வெட்கமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என யோசிக்கிறேன். 'சுபம்' படத்தில் நடித்துள்ளவர்களின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்'' என்றார். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சமந்தா, அதன் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். அப்படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு விவாகரத்து ஆன நிலையில் நாகசைதன்யா மீதான வெறுப்பாக சமந்தா இப்படி கூறியுள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர்.கதை நாயகனாக'காக்கா முட்டை' விக்னேஷ்'காக்கா முட்டை' படத்தில் நடித்து பிரபலமான விக்னேஷ், 'சென்ட்ரல்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறியுள்ளார். நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாரதி சிவலிங்கம் இயக்கியுள்ளார். ''முதலாளித்துவத்திற்கு எதிரான இப்படம், உழைப்பாளர்களுக்கு ஜாதி, மதம், மொழி, இனம் எதுவும் கிடையாது .அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகிறது'' என்றார்.வலைதளங்களுக்குலோகேஷ் கனகராஜ் 'பிரேக்'ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா நடித்துள்ளனர். லோகேஷ் வெளியிட்ட பதிவில் கூலி படத்தின் புரோமோஷன் வரை தற்காலிகமாக வலைதளங்களில் இருந்து நான் சிறிய இடைவெளி எடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கூலி படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளதால் இந்த இடைவெளியை அவர் எடுத்துள்ளார்.