உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை சினிமா - 4.4.2025

மதுரை சினிமா - 4.4.2025

துருவ நட்சத்திரம் காத்திருக்கும் விக்ரம்கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இந்தாண்டு எப்படியும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வீர தீர சூரன் படத்திற்காக தியேட்டர்களில் விசிட் அடித்து வரும் விக்ரமிடம் ரசிகர் ஒருவர் துருவ நட்சத்திரம் படம் எப்போது வெளியாகும் என கேட்டார். அதற்கு, அந்த படத்திற்காக நானும் காத்திருக்கிறேன், கவுதமிடம் கேட்டு ரிலீஸ் தேதியை சொல்கிறேன்'' என்றார்.கேரவனில் அத்துமீறி நுழைந்த இயக்குனர் நடிகை பகீர்100% காதல், கொரில்லா போன்ற தமிழ் படங்களிலும், பிறமொழிகளிலும் நடித்து வருபவர் ஷாலினி பாண்டே. இவர் கூறுகையில் ''எனக்கு 22 வயது இருக்கும்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்தேன். கேரவனில் உடை மாற்றியபோது அந்த படத்தின் இயக்குனர் அதன் கதவை தட்டாமல் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அதிர்ச்சி அடைந்த நான் அவரை திட்டி அனுப்பினேன். அப்போது இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என தெரியவில்லை. உடன் இருந்தவர்களும் இதை பெரிதாக்க வேண்டாம் என்றனர்'' என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இயக்குனரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.வடிவேலுவிடம் எனது ரூ.1 கோடி உள்ளது : ஆர்கேஎல்லாம் அவன் செயல், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆர்கே. தற்போது புதிதாக ஒரு ஸ்டுடியோவை திறந்துள்ளார். இவர் கூறுகையில்'' அடுத்து விலங்குகளை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்கிறேன். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணியை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை இருக்கும். யோகிபாபு, தம்பி ராமையா நடிக்கிறார். ஆர்.கண்ணன் இயக்குகிறார். என் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க அவரிடம் கதை சொன்னேன். அவரிடம் நான் கொடுத்த ஒரு கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிறார். அவர் இறங்கி வந்தால் மீண்டும் இருவரும் இணைந்து நடிப்போம்'' என்றார்.'தந்தையாக நடிக்க ஹீரோக்கள் தயக்கம்'அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் மே 1ல் ரிலீஸாகிறது. இதில் சசிகுமார் இரண்டு மகன்களுக்கு தந்தையாக நடித்துள்ளார். அவர் கூறுகையில், ''இலங்கையிலிருந்து சென்னைக்கு குடியேறும் ஒரு ஈழத் தமிழர் குடும்பம், அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. தமிழ் சினிமாவில் 16 வயது பையனுக்கு அப்பாவா ரெண்டு, மூணு பேரைத் தவிர யாரும் நடிக்க மாட்டாங்க. அவங்களுக்கு 25 வயதில் பையன்கூட இருப்பாங்க. ஆனால் நான் நடிக்க தயார்னு சொன்னேன்'' என்றார். வலைதளங்களின் இருட்டு பக்கங்களை பேசும் 'சாரி' ராம் கோபால் வர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் சாரி. கிரி கிருஷ்ண கமல் இயக்கி உள்ளார். சத்யா, ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் இப்படம் இன்று வெளியாகிறது. ஆராத்யா கூறுகையில், ''வலைதளங்களின் இருட்டு பக்கங்களை இந்தபடம் பேசும். பெண்கள் நிச்சயம் இதை தங்களுடன் தொடர்புப்படுத்தி கொள்ள முடியும்'' என்றார். ராம்கோபால் வர்மா கூறுகையில், ''இது சைகலாஜிக்கல் திரில்லர் படம். பட டிசைன்களை பார்த்து இது கவர்ச்சி படம் என கருத வேண்டாம்'' என்றார்.'ரெய்டு 2'வில் தமன்னாவின் ஆட்டம்நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் நடிக்கிறார். நாயகியை தாண்டி சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடுகிறார். 2018ல் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த ஹிந்தி படம் ரெய்டு. இதன் இரண்டாம் பாகம் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகி உள்ளது. நாயகியாக வாணி கபூர் நடித்துள்ளார். இதில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு தமன்னா நடனம் ஆடி உள்ளார். இதனை ஹனி சிங் பாடி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி