உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாவட்டத்திற்கு ரூ.1064.63 கோடி கடன்

மதுரை மாவட்டத்திற்கு ரூ.1064.63 கோடி கடன்

மதுரை: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன், கறவை மாட்டுக்கடன் தவிர பிற கடன்கள் வழங்குவதற்கு ரூ.1064.63 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் கீழ் மதுரையில் 174 கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ரூ.962 கோடி அளவிற்கு நகைக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் உட்பட பல்வேறு பொருட்களை வாங்குவதற்கான 3 முதல் 5 ஆண்டு மத்திய கால கடன்களுக்கு ரூ.124.5 கோடி, சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.64.85 கோடி, தானியங்களை வைத்து அடமானம் பெறுவதற்கு ரூ.215.2 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மொத்த கடன் இலக்கு ரூ.1064.63 கோடி. பயிர்க்கடன் மற்றும் கறவை மாட்டு பராமரிப்பு கடன்களுக்கான இலக்கு சுற்றறிக்கை வரவில்லை. கடந்தாண்டு மதுரையில் ரூ.270 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி