| ADDED : ஆக 02, 2011 01:21 AM
மதுரை : மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் கொடுக்க வந்த பெண், அவரது அறை முன் மயங்கி விழுந்தார். கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ராணி(43). வீடு பிரச்னையால், சிலரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதற்குரிய வட்டியை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், ஒருவாரமாக கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதுகுறித்து, நேற்று மதியம் 12.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் கொடுக்க, மகளுடன் ராணி வந்தார். அவரது அறை முன் காத்திருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த போலீஸ்காரர்கள் செந்தில்குமார், முரளி ஆகியோர், '108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். காலையில் ராணி சாப்பிடாமல் வந்ததால், மயக்கமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.