| ADDED : ஆக 18, 2011 04:22 AM
மதுரை : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் டி.சி.எஸ்., நிறுவனம் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில், 702 பேர் தேர்வு பெற்றனர்.டி.சி.எஸ்., அதிகாரிகள் கணேசன், தாமஸ், அசோக் சீத்தாராமன், ராம்குமார் மூன்று நாட்களாக பல்வேறு தேர்வுகள் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர். இறுதியாண்டு பயிலும் 840 மாணவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் அபய்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஷ் கூறுகையில்,''கடந்தாண்டு 612 பேர் தேர்வு பெற்றனர். தமிழகத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த 702 பேர் டி.சி.எஸ்., நிறுவனத்தில் தேர்வு பெற்றது, இதுவே முதல் முறை. ஓராண்டுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். எங்கள் மாணவர்கள் சரியான இலக்கை நோக்கி செல்வது பெருமையாக உள்ளது,'' என்றனர். தேர்வு பெற்றவர்களை தாளாளர் கருமுத்து கண்ணன் பாராட்டினார்.