மேலும் செய்திகள்
இன்று இனிதாக மதுரை
25-Apr-2026
கோயில் * சித்திரை பெருவிழா - 9ம் நாள் - திக்கு விஜயம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாசி வீதிகளில் மரவர்ணச் சப்பரம், காலை 8:00 மணி, மாசி வீதிகளில் இந்திர விமானத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், அம்மன் உலா, வடக்குமாசி - கீழமாசி வீதி சந்திப்பு லாலா ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்தில் மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், மாலை 5:00 மணி. * சித்திரை பெருவிழா - முதல் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், திருக்கல்யாண மண்டபத்தில் தோளுக்கினியானில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளல், மாலை 6:30 மணி. * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. * கும்பாபிஷேகம்: வாலகுருநாதசுவாமி - அங்காள ஈஸ்வரி கோயில், திடியன், அம்பட்டையம்பட்டி. காலை 9.00 மணி முதல் 10.25க்குள். பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. * கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி * கல்லுாரி நாள், கலாசார நிகழ்ச்சி: அல்ட்ரா பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் மணிமாறன், துணை முதல்வர் சிவசங்கரி, கவுரவ விருந்தினர்கள்: அல்ட்ரா அறக்கட்டளை சேர்மன் ஆறுமுகம், துணை சேர்மன் பாபு தண்டபாணி, பங்கேற்பு: இசை கலைஞர்கள் பிரியா ஜெர்சன், சரத் மேத்யூ, ஜாம், ராஜில் ராஜ், மாலை 4:00 மணி. * கதை சொல்லுதல் குறித்த கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: வினோ சுப்ரஜா நிறுவனர் வினோ சுப்ரஜா, ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, மாலை 5:00 மணி. விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
25-Apr-2026