மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
20-Mar-2026
கோயில் * பங்குனி பிரம்மோற்ஸவம் - 5ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, சுவாமி ராமாவதாரத்தில் காட்சி, காலை 8:00 மணி, வெள்ளி அனுமார் வாகனத்தில் உலா, மாலை 6:30 மணி. * பங்குனி உத்திரத் திருவிழா - காப்பு கட்டுதல்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, பால்குட பக்தர்கள் விரதம் அனுஷ்டிப்பு, காலை 7:00 மணி. * பங்குனி திருவிழா, முளைப்பாரி கரைத்தல், வடக்குபுற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, இரவு 7:00 மணி. * பங்குனி திருவிழா :முளைப்பாரி ஊர்வலம், ராக்காயி அம்மன் கோயில், உறங்கான்பட்டி, காலை 10:00 மணி. * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி. பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * ராமநவமியை முன்னிட்டு ராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி. * திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி * வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், தொடங்கி வைப்போர்: ஓட்டல் பார்க் பிளாசா சேர்மன் கே.பி.எஸ்.கண்ணன், ஆர்.டி.ஓ., கருணாகரன், ஏற்பாடு: நாட்டு நலப்பணி திட்டம், காலை 9:30 மணி.
20-Mar-2026