கேங்மேன்களுக்கு ஊதியம், பதவி உயர்வு மதுரை மின்வாரிய மாநாட்டில் வலியுறுத்தல்
மதுரை : 'மின்வாரியத்தில் கேங்மேன்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர். மதுரையில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு பெருநகர் கிளையின் 12வது திட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். கருப்பையா கொடியேற்றினார். வடக்கு கோட்ட துணைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். மண்டல செயலாளர் உமாநாத் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் வேலை அறிக்கையையும், பொருளாளர் குழந்தைவேல் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். துணைமேயர் நாகராஜன், மாவட்ட செயலாளர் திருமுருகன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் சர்தார்பாட்ஷா, மாநில துணைத் தலைவர் குருவேல் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மின்துறையை பொதுத் துறையாகவே பாதுகாக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த 2022 - மசோதாவை கைவிட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். கணக்கீட்டுப் பணியாளர்களுக்கு வாரியமே அலைபேசி அல்லது டேப்லெட் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.