உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை - குருவாயூர் ரயில் வழக்கம் போல் இயங்கும்

மதுரை - குருவாயூர் ரயில் வழக்கம் போல் இயங்கும்

மதுரை: பராமரிப்பு பணிகளால் பகுதி ரத்து செய்யப்பட்ட மதுரை - குருவாயூர் - மதுரை ரயில்கள், வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது. கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை - குருவாயூர் ரயில் (16327), நாளை (ஜூலை 26) வழக்கம்போல் குருவாயூர் வரை இயக்கப்படும். மறுமார்க்கம் ரயில் (16328), ஜூலை 27 அதிகாலை 5:50 மணிக்கு குருவா யூரில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து சேரும். நாளை, கேரள மாநிலம் ஆலப்புழா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' ரயில் (16343), வழக்கமான பாதையில் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !