உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி; மதுரைக்கு கிடைத்த பெருமை

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி; மதுரைக்கு கிடைத்த பெருமை

மதுரை: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக மதுரையை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் துாய்மையான நகரங்களின் பட்டியலை சமீபத்தில் இந்த அமைச்சகம் வெளியிட்டது. அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் மதுரைக்கு கடைசி இடம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்வேயில் பல்வேறு முரண்பாடுகளும், கேள்விகளும், எதிர்ப்பும் எழுந்தன. இந்நிலையில் திடீரென்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக மதுரையை இந்த அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நகர்நலப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுக்க தேர்வு செய்யப்படும் நகரங்களில் மத்திய தரக் குழு ஆய்வு செய்து வருகிறது. எந்த நகரங்களின் நகராட்சிகள் பொதுக் கழிப்பறைக் கட்டி, சுத்தத்தை பராமரிக்கிறதோ, அந்த நகரத்தில் இந்த ஆய்வுக்குழு நேரில் சென்று ஆய்வு செய்து துாய்மை மாநகராட்சியாக அறிவிக்கின்றது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் இதுபோன்று அறிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஆக 07, 2025 19:12

எல்லா திறந்த வெளியிலும் கட்டிடம் கட்டியாச்சு. ஆட்டம் க்ளோஸ்.


kumaresan
ஆக 07, 2025 10:11

திறந்தவெளி கழிப்பிடத்திற்கு முக்கிய காரணம் அந்த அந்த ஏரியாவில் உள்ள வணிக கடைகள் . மதுரையில் போதிய இருப்பிடம் உள்ள கடைகள் அனைத்திலும் ஊழியர்கள் பயன்பாட்டிற்கு கழிவறை இருந்தால் மட்டும் மாநகராட்சி அனுமதி கொடுக்க வேண்டும் . குறிப்பாக லாரி கோடௌன், லாரி புக்கிங் இடத்தில் கண்டிப்பாக இடை அமல் படுத்த வேண்டும் . சிறிய கடைகள், பிளாட் போர்ம் , காய்கறி மார்க்கெட் உள்ள இடங்களில் 50 கடைக்கு ஒரு கழிவறை இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல அதை தினமும் பராமரிக்க அவர்களிடம் ஒரு சிறு தொகையை வசூலிக்க வேண்டும் . அப்போது தான் சுத்தமாக வைத்துக்கொள்ளவார்கள். நன்றி


முக்கிய வீடியோ