உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மேயர் கணவருக்கு ஜாமின்

மதுரை மேயர் கணவருக்கு ஜாமின்

மதுரை:சொத்து வரி விதிப்பு முறைகேடு புகாரில் சிக்கி, மதுரை மாநகராட்சி தி.மு.க., மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், ஆக., 12ல் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை ஏற்கனவே மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. பொன் வசந்த் உயர் நீதிமன்ற கிளையில், 'வரி வசூலில் எனக்கு தொடர்பு இல்லை. எனக்கு உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற வேண்டியுள்ளது; ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, மீண்டும் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி, 'வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை. ஜாமின் அனுமதிக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை