உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தானம் பெற்ற உடலை வாங்க முதலில் மறுத்து பின்பு பெற்றுக் கொண்ட மதுரை மருத்துவக் கல்லூரி

தானம் பெற்ற உடலை வாங்க முதலில் மறுத்து பின்பு பெற்றுக் கொண்ட மதுரை மருத்துவக் கல்லூரி

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், ஓட்டு எண்ணிக்கையை காரணம் காட்டி தானமாக பெற்ற உடலை வாங்க மறுத்து பிரச்னையான பின்னர் ஏற்றுக் கொண்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்த மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் வேலுச்சாமி, 82 நேற்று (மே28) இறந்தார். அவரது உடலை மகன் சுவாமிநாதன் கல்லூரிக்கு இன்று தானமாக தர வந்த போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி உடனே வாங்க மறுத்து அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பினர். இது குறித்து அவரது மகன் சுவாமிநாதன் கூறுகையில், உடலை பதப்படுத்தி (எம்பாமிங்) பாதுகாத்து தேர்தல் முடிவுகள் முடிந்தபின் ஜூன் 6ஆம் தேதி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும் என்கின்றனர். மார்ச்சுவரியில் மற்ற உடல்களுடன் தானமாக தந்த தந்தை உடலையும் சேர்த்து வைப்பது வேதனை அளிக்கிறது என்றார். இது குறித்து கலெக்டர் சங்கீதாவிடம் பேசுவதற்காக டாக்டர்கள் சென்றனர். உடலை அனாடமி துறையில் வைப்பதற்கு நிலைய மருத்துவ அலுவலர் சரவணன், துறைத் தலைவர் பார்த்திபன் ஆகியோர் கலெக்டர் சங்கீதாவிடம் அனுமதி கோரினர். சங்கீதா அனுமதியின் பேரில் உடற்கூறாய்வு துறையில் இன்று மாலை 5:00 மணிக்கு உடல் தானமாக ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venkatasubramanian krishnamurthy
மே 29, 2024 19:47

தேர்தல் நடத்தை விதிகளுக்காக இத்தனை நாட்கள் மருத்துவக் கல்லூரியை மூடி வைத்திருந்தார்களா திராவிட மாடல் ஆட்சியினர்? அத்தியாவசிய தேவைகளுக்கு விதிவிலக்கு உண்டென்பது கூட தெரியாத அதிகாரிகள் ஆகிவிட்டார்களா அவர்கள்? பிரதமரின் தியானத்திற்கு தடை கோருவது, தானமாக வழங்கப்பட்ட உடலை வாங்க மறுப்பதென என்ன மாதிரியான நிர்வாக மாடல் இது?


Vathsan
மே 29, 2024 20:52

தேர்தல் கமிஷன் மத்திய அரசின் கீழ் வருகிறது என்பதை இவருக்கு எப்படி புரிய வைப்பது?


GoK
மே 29, 2024 19:04

உடல் தானம் ஆராய்ச்சிகளுக்காக மருத்துவ கல்லூரிகளுக்கு என்பது நல்ல ஒரு கருத்து ஆனால் நடைமுறையில் சரிப்படாது நிறைய உடல்கள் சாலை விபத்துகள் மற்றும் காரணங்களால் யாராலும் கூறப்படாத நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பணிஅடங்குகளில் வைக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதுமில்லை. வலைத்தளங்களிலும் இதன் முறைப்பாடுகள் விவரம் கிடையாது. எல்லாவற்றையும் போலத்தான் இதுவும் ஏட்டுச்சுரைக்காய் நடைமுறைக்கு உதவாத ஒன்று.


Tiruchanur
மே 29, 2024 17:48

DMK அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருந்தால் உடனே வாங்கியிருப்பார்கள்


Raghavan
மே 29, 2024 17:40

வெட்ககேடு. இறந்த உடலை தனமாக பெறுவதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம். அதுவும் இறந்தது நம் நாட்டின் ஒரு ராணுவ வீரர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை