| ADDED : ஜூலை 28, 2011 03:30 AM
திருப்பரங்குன்றம் : மதுரை கல்வி மாவட்ட பள்ளிகளில் 6 முதல் 10 வரை
படிக்கும் 500 மாணவர்களுக முடநீக்கியல் கண்டறிதல் முகாம் திருப்பரங்குன்றம்
அரசு உயர் நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலக உதவியாளர்
சீனிவாசன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா முன்னிலை
வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க இயன்முறை மருத்துவர் செல்லி விஜயராஜன்
தலைமையில், சிவக்குமார், சிவசங்கர், மணிகண்டன் உட்பட ஒன்பது இயன்முறை
மருத்துவர்கள் சோதனை செய்தனர்.30 சதவீத மாணவர்களுக்கு முடநீக்கியல்
பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு பிசியோதெரபி
பயிற்சியும், மருந்துகளும், தேவைப்பட்டால் ஆபரேஷனும் செய்யப்பட உள்ளதாக
இயன்முறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.