உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சியில் எதற்கு முக்கியத்துவம்?புதிய கமிஷனர் தகவல்

மாநகராட்சியில் எதற்கு முக்கியத்துவம்?புதிய கமிஷனர் தகவல்

மதுரை : மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக நடராஜன் நேற்று பொறுப்பேற்றார். அவர் கூறியதாவது: மகளிர் சுகாதார வளாகங்களை தூய்மையாக பராமரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்ம. கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்படும். நிதியில்லாமல் முடங்கியுள்ள திட்டங்களுக்கு, நிதி பெற்று புத்துயிர் அளிக்கப்படும். சாலை, பூங்காக்கள் பராமரிப்பிற்கு முக்கியத்துவம் தரப்படும். மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு பின் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலை, அமைதியாக நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார். கமிஷனராக இருந்த செபாஸ்டின், பொறுப்புகளை ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை