| ADDED : ஜூலை 30, 2011 03:12 AM
மதுரை:சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி, மதுரையில் நேற்று தி.மு.க.,
இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் கைது
பயத்தில் பங்கேற்கவில்லை. ஸ்காட் ரோட்டில் இலக்கிய அணி செயலாளர்
சேவுகப்பெருமாள் துவக்கி வைத்தார். நிலமோசடி வழக்கில் நகர் செயலாளர் தளபதி
சிறையில் இருப்பதால், அவைத் தலைவர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி
வகுப்பை மாணவர்கள் புறக்கணித்தது போல் காட்டுவதற்காக, கட்சிக்காரர்களின்
பிள்ளைகள் 15 பேரும், பெற்றோர் தரப்பில் கட்சிக்காரர்களின் மனைவிகள் 30
பேரும், மகளிரணியினர் சிலரும் அழைத்து வரப்பட்டிருந்தனர். முக்கிய
நிர்வாகிகள் பலரும் கைது பயத்தில் இருப்பதால், மாஜி நகர் செயலாளர்
வேலுச்சாமி, மாஜி மேயர் குழந்தைவேலு, மாஜி எம்.எல்.ஏ., கவுஸ்பாட்ஷா உட்பட
சிலர் மட்டுமே பங்கேற்றனர்.நானூறு பேருடன் துவங்கிய ஆர்ப்பாட்டம், முடியும்போது 150 ஆக குறைந்தது.
வந்திருந்த நிர்வாகிகள் மேடை ஏறாமல் ஒதுங்கியே நின்றுவிட்டு கலைந்து
சென்றனர். அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடந்ததால், யாரும் கைது
செய்யப்படவில்லை. உசிலம்பட்டி: மனித உரிமைகள் கழகம் மாவட்டச் செயலாளர்
அந்தோனி தலைமையில், மாணவர்கள் கல்வி உரிமை பாதுகாப்பு பெற்றோர்
சங்கத்தினர்கள் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 34 பேர்களை உசிலம்பட்டி
போலீசார் கைது செய்தனர்.