உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாசடையும் கோயில் ஊரணி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மாசடையும் கோயில் ஊரணி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:மதுரையில் கோயில் ஊரணி மாசடையும் நடவடிக்கையை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, அரசு சிறப்பு வக்கீலுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை சிந்தாமணியை சேர்ந்த செல்லப்பா, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்: சிந்தாமணி காமாட்சியம்மன் கழுவடையான் கோயிலின் பரம்பரை அறங்காவலராக உள்ளேன். கோயிலுக்கு சொந்தமான ஊரணியில் சிந்தாமணி, சின்னஅனுப்பானடி ஊராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுகின்றனர். கழிவுநீரை ஊரணிக்கு திருப்பிவிடுகின்றனர். இதனால், கோயில் புனிதம் பாழ்படுகிறது. ஊரணியின் நீராதாரம் மாசடைகிறது. ஊரணியின் புனிதத்தன்மையை காக்கக்கோரி இரண்டு ஊராட்சி தலைவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனினும் பயனில்லை. ஊரணியில் குப்பைகளை கொட்டவும், கழிவுநீரை திருப்பி விடவும் தடை விதித்து, இரண்டு ஊராட்சி தலைவர்களுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டார். ஆனால், வழக்கம்போல் ஊரணி மாசடைந்து வருகிறது. ஊரணியின் புனிதம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் கோரியிருந்தார்.இம்மனு நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பழ.ராமசாமி, சாதிக்ராஜா ஆஜராயினர். இதுகுறித்து அரசு சிறப்பு வக்கீல் மகேந்திரன் விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை