உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காஸ் பைப் லைன் அமைக்க தடை

காஸ் பைப் லைன் அமைக்க தடை

மதுரை:கரூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக ரிலையன்ஸ் நிறுவனம் காஸ் பைப் லைன் அமைக்க மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தாக்கல் செய்த ரிட் மனுவில், விஜயவாடாவில் இருந்து சென்னை, விழுப்புரம், திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு பூமிக்கடியில் பைன் லைன் பதித்து காஸ் கொண்டு செல்ல ரிலையன்ஸ் ரீயோலோஜிஸ்டிக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக எங்கள் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எங்கள் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும், என கோரினர்.இதை விசாரித்த நீதிபதி ஆர்.சுதாகர், பைப் லைன் அமைக்க ஆக., 11 வரை இடைக்கால தடை விதித்தார். மேலும் மனு குறித்து பதிலளிக்கவும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ