உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலப்பிரச்னையில் போலீஸ் தலையீடுஎதிர்த்து அழகிரி ஐ.டி., கம்பெனி மனு

நிலப்பிரச்னையில் போலீஸ் தலையீடுஎதிர்த்து அழகிரி ஐ.டி., கம்பெனி மனு

மதுரை:மதுரையில் மத்தியமைச்சர் அழகிரி குடும்பத்தினர் இயக்குனர்களாக உள்ள தயா சைபர் பார்க் ஐ.டி., கம்பெனி வாங்கிய நிலங்கள் குறித்து போலீசார் தலையிட தடை கோரிய மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, டி.ஜி.பி.,யை அணுக உத்தரவிட்டது.தயா சைபர் பார்க் பொறுப்பு அதிகாரி மணிகண்டன் தாக்கல் செய்த ரிட் மனு: கம்பெனி, மார்ட்டின் என்பவரிடமிருந்து இரு சர்வே எண்களில் 3.18 ஏக்கர் மற்றும் 77 சென்ட் நிலங்களை முறையே 2010 மார்ச் 5 மற்றும் 15 தேதிகளில் வாங்கியது. நிலங்கள் முறையே ரூ.74.46 லட்சம் மற்றும் ரூ.19.19 லட்சத்திற்கு வாங்கப்பட்டன. நிலங்களை மார்ட்டின், ஏ.ஆர்.நாகேந்திர ஐயர் நாகர்பூஜை வகையறா அன்ன சமராதணை டிரஸ்டிடம் இருந்து வாங்கினார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின், மார்ட்டினிடமிருந்து இவை வாங்கப்பட்டன. மார்ட்டின் வாங்கியதை எதிர்த்து 2004, 2005ல் ஒரு டிரஸ்டி நடராஜன், வழக்கு தொடர்ந்தார். வழக்கு பைசல் ஆனது. ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.இந்நிலையில், டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர், எஸ்.பி., மற்றும் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் இதற்கு வேறுசாயம் பூசுகின்றனர். கம்பெனி இயக்குனர்களாக மத்தியமைச்சர் அழகிரி, அவரது மனைவி காந்திஅழகிரி மற்றும் மகன் தயாநிதிஅழகிரி உள்ளனர். நிலங்களை சட்ட விரோதமாக வாங்கியதாகவும், இயக்குனர்கள் கைதாகவுள்ளதாகவும் தகவல்கள் பரப்பப்படுகிறது. இச்சொத்து தொடர்பாக இயக்குனர்களை தொந்தரவு செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும். இதில் தலையிட, இடைக்கால தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி ஆர்.சுதாகர் முன் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வீர.கதிரவன் ஆஜரானார். அரசு பிளீடர் ஜனார்த்தனன், ''மனுதாரர் கம்பெனி குறித்து போலீசாருக்கு புகார் வரவில்லை. வழக்கு பதியவில்லை,'' என்றார்.நீதிபதி, ''யூகங்களின்படி மனுவை தாக்கல் செய்துள்ளனர். மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேவைப்பட்டால், மனுதாரர் டி.ஜி.பி.,யிடம் மனு செய்யலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ