உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோன், சிட்டா நூலுக்கு ஒரே வரி நூல் வியாபாரிகள் கோரிக்கை

கோன், சிட்டா நூலுக்கு ஒரே வரி நூல் வியாபாரிகள் கோரிக்கை

மதுரை : கோன் மற்றும் சிட்டா நூலுக்கு மூன்று சதவீத வாட் வரி விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு நூல் வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.மதுரையில் கூட்டமைப்பு கூட்டம் மாநில தலைவர் வி.என்.எஸ்.எஸ். சுப்புராம் தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ராமசுப்ரமணியன், துணை தலைவர்கள் லட்சுமணன், பழனியப்பன், தங்கவேலு, இணை செயலாளர்கள் செல்வராஜ், சச்சிதானந்தம், ரங்கசாமி பேசினர். இணை பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.சாயப்பட்டறை பிரச்னையில் கழிவு நீரை சுத்திகரிக்க மானியம் வழங்க அரசு முன்வந்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஜவுளி தொழில் நெருக்கடியை களைய நூற்பாலைகள் சங்கங்கள், நூல் வியாபாரிகளின் கூட்டமைப்பு, ஜவுளி உற்பத்தியாளர்கள் கொண்ட முத்தரப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். கோன் நூலுக்கு மட்டும் 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. சிட்டா நூலுக்கு வரியில்லை. சில நூற்பாலைகள், கோன் நூலுக்கு சிட்டா நூல் என பில் போட்டு விற்கின்றனர். இதை தடுக்க, இரு நூல்களுக்கும் ஒரே மாதிரி வரி விதிப்பு தேவை. தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், கைத்தறி நெசவாளர்களுக்கு 3.5சதவீத மானியத்தில் சிட்டா நூல் பேல்களை வழங்குகின்றனர். அதை அவர்கள் வெளிமார்க்கெட்டில் விற்கின்றனர். இதை தடுக்க அரசு சிட்டா நூலுக்கு மானியம் வழங்காமல், இதன் மூலம் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ