உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

மதுரை : மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையிலிருந்து எம்.எம்.லாட்ஜ் சந்திப்புவரை செல்லும் மேலக்காரத் தெருவில் (சூப்பர் டெய்லர்) கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி இன்று துவங்குகிறது. அங்கு தற்காலிகமாக கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*தேவர்சிலை சந்திப்பிலிருந்து, மேலக்காரத் தெரு வழியாக எம்.எம்.லாட்ஜ் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை.*தேவர் சிலையிலிருந்து எம்.எம்.லாட்ஜ் செல்ல வேண்டிய இரு சக்கர வாகனங்கள் ஆழ்வார்புரம், காந்தி சிலை சந்திப்பு, வைகை வடகரை வழியாக பாலம் ஸ்டேஷன் ரோடு செல்ல வேண்டும்.*தேவர் சிலையிலிருந்து எம்.எம்.லாட்ஜ் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் சந்திப்பு, யானைக்கல் புதுப்பாலம் வழியாக பாலம் ஸ்டேஷன் ரோடு செல்ல வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ