உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை வீரர் தேர்வு

 மதுரை வீரர் தேர்வு

திருப்பரங்குன்றம்: ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை சார்பில், 69வது தேசிய கராத்தே போட்டிகளுக்கான தகுதி தேர்வு போட்டி நடந்தது. மதுரை திருநகர் சென்டோ பூசி தற்காப்பு கலைக்கூடத்தின் வீரர் மாதவன் 19 வயதிற்குட்பட்டோருக்கான 50 கிலோ எடை பிரிவில் முதலிடம் வென்றார். இவர் மகாராஷ்டிராவில் ஜனவரி 2வது வாரத்தில் நடக்கும் தேசிய போட்டியில் தமிழக அணியில் விளையாட தேர்வாகியுள்ளார். அவரை பயிற்சி கூட நிறுவனர் பொன்னுச்சாமிராஜா, தொழில்நுட்ப இயக்குனர் திருப்பதி, செயலாளர் கண்ணன், தலைவர் மணிகண்டன், சி.எஸ்.ஆர்., பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ