உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை வருவாய்த்துறை அலுவலர்கள் பிரசாரம்

மதுரை வருவாய்த்துறை அலுவலர்கள் பிரசாரம்

மதுரை; மதுரை தாலுகாக்களில் வருவாய்த்துறை கூட்டமைப்பினர் கோரிக்கை மாநாடு பிரசாரத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து காலியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய் அலுவலர்கள் பணிநெருக்கடியுடன் செயல்படுவதை தவிர்க்க இத்துறையில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அனைத்து அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆக.23 ல் மதுரை மருத்துவ கல்லுாரி கலையரங்கில் கோரிக்கை மாநாடு நடக்க உள்ளது. இதுபற்றிய பிரசாரத்தை வருவாய் அலுவலர்கள் வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் தாலுகாக்களில் செய்தனர். செப்.3, 4ல் நடக்க உள்ள 48 மணி நேர வேலை நிறுத்தம் தொடர்பாகவும் பேசினர். மாநில தலைவர் முருகையன், மாவட்ட தலைவர் கோபி செயலாளர் முகைதீன் அப்துல்காதர், நிலஅளவை ஒன்றிப்பின் மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, பெரா கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரகுபதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி