மதுரை மாணவி பதக்கம்
மதுரை: மாலத்தீவில் 7வது கேரம் உலகக்கோப்பை போட்டி நடந்தது. இந்திய பெண்கள் அணி சார்பில் மதுரை வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி முதலாண்டு மாணவி மித்ரா பங்கேற்றார். குழுப்பிரிவில் ஆடிய மித்ரா தங்கப்பதக்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரை கல்லுாரித் தலைவர் முத்துராமலிங்கம் பாராட்டினார்.