| ADDED : பிப் 17, 2024 05:21 AM
மதுரை: மதுரை அமெரிக்கன்கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநிலஅளவிலான போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய மதுரை விளையாட்டு விடுதி மாணவர்கள் 14 வயதிற்குட்பட்ட கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெண் கல பதக்கம் வென்றனர்.17 வயது பீச் வாலிபால்போட்டியில் வெண்கலபதக்கம், 17 வயது வாலிபால் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றனர். 19 வயது ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இம்மாணவர்களை கலெக்டர் சங்கீதா பாராட்டினார்.ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கூடைப்பந்து, வாலிபால் பயிற்சியாளர்கள் பிரபு, சிவக்குமார், அமெரிக்கன் கல்லுாரி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாம் உடனிருந்தனர்.